MY LITTLE WORLD
ஒவ்வொரு தனிமனிதனின் உலகமும் அவர்களின் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களால் ஆனது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உலகத்தை உருவாக்கும் தனித்துவமான விடயங்கள் உள்ளன. அவற்றில் எனது உலகத்தில் எனது சில ஆர்வங்கள்,விருப்பங்கள் உள்ளன. 😍
01. புத்தகம் வாசித்தல் 📕
நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ஒரு புதிய கதவை திறக்கிறது. அது எனக்குப் புதிய உலகங்களை, வெவ்வேறு மனிதர்களை மற்றும் அறியப்படாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறது. கற்பனை உலகத்தைத் தந்து, எனது சிந்தனைத் திறனை வளர்க்கிறது.
02. பயணம் செய்வது - Travelling 🚲
பயணம் செய்வது எனக்கு விருப்பமான ஒன்று. ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம். புதிய இடங்களைப் பார்த்து, புதிய மனிதர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறேன். இது எனக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது.
03. உணவு சமைப்பது - Cooking 😋😍
சமையல் என்பது எனது மற்றொரு ஆர்வம். அது எனக்கு அமைதியையும் , மன நிறைவையும் தரும் ஒரு செயல். நான் புதிய சமையல் குறிப்புகளை இணையம் மூலம் பார்த்து, முயற்சி செய்து, எனக்குப் பிடித்த உணவுகளை உருவாக்கும்போது அது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
- மூன்று விடயங்களும் என் வாழ்க்கையை நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்றன. இதுவே எனது சிறிய உலகம்! 😍
Captured Moments in Three Themes
புகைப்படம் 01. எனது கிராமத்தின் வயல்வெளி.
Theme : இயற்கை
பட விளக்கம் :
இது எனது ஊரிலுள்ள தொடர் வயல்வெளிப் பகுதியாகும். நான் எனது நண்பிகளுடன் வயல்வெளிக்குச் சென்றபோது இப்படம் பிடிக்கப்பட்டது. இவ் வயல்வெளி எனது ஊருக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகக் காணப்படுகிறது. மேகமூட்டமான வானமும் , துடிப்பான பச்சைக் காடுகளும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சியை அளிக்கிறது. இவை மனதுக்கு ஆறுதலையும், அமைதியையும் தருகின்றன.
புகைப்படம் 02. பூச்செடிகளுக்கு நடுவில் எனது செல்லப்பிராணி ரோஸி.
Theme: செல்லப்பிராணி
பட விளக்கம் :
இது எனது வீட்டுச் செல்லப்பிராணி ரோஸியின் புகைப்படம். என் வீட்டு முற்றத்தில் பூச்செடிகளுக்கு நடுவே ரகசியமாக ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது. அதன் குறும்புப் பார்வையும் , வண்ணமயமான ரோமங்களும் , தோற்றமும் எனக்கும் இந்தப் பசுமையான சூழலுக்கும் அழகு சேர்க்கின்றன.
பட விளக்கம் :
இப் புகைப்படம் எனது அக்காவின் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட கேக்கின் படமாகும். இது குடும்ப மகிழ்ச்சி, அன்பு, பிரதிபலிப்பு என்பவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தருணமாகும். இப்படம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டக்கூடியது.
இப்புகைப்படங்கள், எனது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களில் எடுக்கப்பட்டவையாகும். இதன் வழியாக எனது பழைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்களுடைய வாழ்விலும் இது போன்ற தருணங்கள் இருப்பின் பகிர்ந்துகொள்ளலாம்.
நன்றி!
Comments
Post a Comment